இந்தியா
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 288தொகுதிகளில் பா.ஜ.க.- சிண்டே சிவசேனை- அஜித் பவார் கட்சி கூட்டணி 190 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ்தலைமையிலான இந்தியா கூட்டணி 85 இடங்களிலும்,
மற்ற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதுவே ஜார்க்கண்டில் இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலையில் வருகின்றன. மொத்தமுள்ள 81 இடங்களில் சற்று நேரத்துக்கு முன்னர்வரை காங்கிரஸ் அணி 45 இடங்களில் முன்னிலையிலும் பா.ஜ.க. அணி 30+ இடங்களில் அடுத்ததாகவும் வந்திருந்தது.
இடையில் பா.ஜ.க. அணி முன்னிலையிலும் மீண்டும் தற்போது இந்தியா கூட்டணி 42 இடங்களிலும் பா.ஜ.க. அணி 35 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.