
நாடாளுமன்ற மக்களவையில் ஏற்பட்ட அமளியில் மூன்றாவது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளிக்க முனைந்தார். ஆனால் இதில் பின்னணியில் நடந்திருப்பது குறித்து கேட்டும் நேற்று 9 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
அதைப் பொருட்படுத்தாமல் பியூஸ் கோயல் விளக்கம் அளிக்க முயன்றபோதும் முடியவில்லை. அவை அமளி துமளியானது.
ஒரு கட்டத்தில் அதைச் சமாளிக்கமுடியாமல் அவையை பிற்பகல்வரை ஒத்திவைத்தார், அவைத்தலைவர் ஓம்பிர்லா.
நேற்றும் அதற்கு முன்னரும் அவையில் இதேபோலப் பிரச்னைகள் எழுந்து, அவையைத் தள்ளிவைக்கும் சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.