இந்தியா
நாடாளுமன்றத்தில் இன்று காலையில் நடைபெற்ற தள்ளுமுள்ளு தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பா.ஜ.க.வின் மூன்று எம்.பி.கள். எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தியிடம் கண்ணியக்குறைவாகவும் அவருடைய தனியுரிமையை மீறும்வகையிலும் நடந்துகொண்டனர் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.