மின்சார அடுப்பும் அவுட் ஆஃப் ஸ்டாக்... எல்லை மீறும் மக்களின் பீதி!

மின்சார அடுப்பும் அவுட் ஆஃப் ஸ்டாக்... எல்லை மீறும் மக்களின் பீதி!
Published on

மேற்கு ஆசியப் போரால் நாடு முழுவதும் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமேசான் இணையதளத்தில் பின்சார அடுப்பு அவுட் ஆஃப் ஸ்டாக் என வருகிறது.

கடந்த நில நாள்களாக ஆன்லைன் வணிக தளங்களில் மின்சார அடுப்புகளின் (இன்டக்சன் ஸ்டவ்) விற்பனை பல மடங்கு அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 4- 5 நாட்களில் மட்டும் மின் அடுப்புகளின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல் அமேசான் தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விற்பனை 20 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது அமேசான் இணையதளத்தில் மின்சார அடுப்புகள் அவுட் ஆஃப் ஸ்டாக் என வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், பிளிப்கார்ட் இணையத்தில் குறைந்த அளவு ஸ்டாக் இருப்பதாக காட்டுகிறது. அதுவும் விற்றுத்தீர்ந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்றவை இருப்பு இருப்பதாக நிறுவனங்கள் விளக்கம் அளித்தாலும் மக்கள் எதையும் நம்பால் பெட்ரோல், டீசல், மீன்சார அடுப்பை வாங்கி குவித்துள்ளனர் பீதியில்.

logo
Andhimazhai
www.andhimazhai.com