இந்தியா
மகாராஷ்டிர மாநிலத்தில் யார் முதலமைச்சர், துணைமுதலமைச்சர் என்கிற இழுபறி ஒருவழியாக இன்று முடிவுக்கு வந்தது.
மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று மாலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மைய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பா.ஜ.க.வின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
மகாராஷ்டிர முதலமைச்சராக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார்.
துணைமுதலமைச்சர்களாக முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே, சரத்பவாரின் தம்பி மகன் அஜித்பவார் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.