மூத்த குடிமக்களுக்கு மீண்டும் இரயில் சலுகை எப்போது?

மாநிலங்களவையில் சல்மா, தி.மு.க. உறுப்பினர்
மாநிலங்களவையில் சல்மா, தி.மு.க. உறுப்பினர்
Published on

மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகையை மீண்டும் வழங்கிடவேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் இராஜாத்தி சல்மா வலியுறுத்தினார்.

அவையில் நேற்று காலையில் நேரமில்லா நேரத்தில் பேசுகையில், அவர் இதைப் பற்றி கேள்வி எழுப்பினார்.

”அனைத்து வகை பயணங்களிலும் மூத்த குடிமக்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையே 40% மற்றும் 50% வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மார்ச் 2020உடன் நிறுத்தப்பட்டன. அதன் பின் இந்த இடைநீக்கம் திரும்பப் பெறப்படவில்லை. ஓய்வூதியத்தை நம்பியுள்ள முதியவர்கள் மற்றும் நிலையான வருமானம் இல்லாத முதியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று அவர் கூறினார்.

”கோவிட்-19 காலகட்டத்தில் இந்தச் சலுகைகளை நிறுத்தி வைத்ததன் மூலம் அமைச்சகம் ரூ.2560.9 கோடியைச் சேமிக்க முடிந்தது என்பதை தகவல் உரிமைச் சட்டப்படியான தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட பயணிகளுக்கு உதவுவதற்காக, குறைந்தபட்சம் ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு ஏசி வகுப்புகளிலாவது இந்தச் சலுகைகளை மீட்டெடுக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ள போதிலும் மேற்கொண்டு அதில் நடவடிக்கை எதுவுமில்லை.

இரயில்வே அமைச்சர் உடனடியாக இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, இந்தச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் இதனால் நமது மூத்த குடிமக்கள் எளிதாகவும் மரியாதையுடனும் பயணிக்க முடியும்.” என்றும் சல்மா பேசினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள், பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட்டுவரும் சலுகைகளை விரிவுபடுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com