இந்தியா
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்தியத் திரையுலகின் உயர்ந்த அரசு விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
வரும் 23ஆம் தேதி நடைபெறும் 71ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இவ்விருது அளிக்கப்படும் என மைய அரசின் ஒளிபரப்புத் துறை தெரிவித்துள்ளது.
பல தலைமுறைகளையும் கவர்ந்திழுத்த ஓர் ஆளுமை என மோகன்லாலுக்கு மைய அரசு புகழாரம் சூட்டியுள்ளது.