‘நீதியை நிலைநாட்டவே தாக்குதல்’ - இந்திய ராணுவம் விளக்கம்!

‘நீதியை நிலைநாட்டவே தாக்குதல்’ - இந்திய ராணுவம் விளக்கம்!
Published on

பெகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நீதியை நிலைநாட்டவே தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

பெகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மூன்று தீவிரவாத அமைப்புகளைக் குறிவைத்து ஒன்பது இடங்களில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரோஷி, விக் கமாண்டர் வியோம்கா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், பெகல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பாவி மக்களுக்கு எதிரான தீவிரமான கொடூரமான தாக்குதல். குடும்பத்தினர் முன்னர் அப்பாவி மக்கள் நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பெகல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரம் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. தவறிவிட்டது.

இந்தியா மீது மேலும் தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இப்படியான எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க, இந்தியா திருப்பி தாக்கும் உரிமையைப் பயன்படுத்தி உள்ளது. இந்தியாவின் தாக்குதல் பயங்கரவாதிகளின் தளங்களை அழிப்பதில் கவனம் செலுத்தியது.” என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய கர்னல் சோபியா குரோஷி,”பெகல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டர்களுக்கு நீதி வழங்கவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் 25 நிமிடங்கள் நடந்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ நிலையங்கள் குறிவைக்கப்படவில்லை. இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் யாரும் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை.” என்றவர் தாக்குதல் தொடர்பான வீடியோவையும் வெளியிட்டு பேசினார்.

பின்னர் பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், காஷ்மீரின் இயல்பு நிலையை குலைக்க பெகல்காம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9 தீவிரவாதிகளின் முகாம்கள் குறிவைக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. தாக்குதலை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது.” என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மும்பை தாக்குதல், புல்வாமா தாக்குதல் குறித்த வீடியோக்களை இந்திய ராணுவம் ஒளிபரப்பியது. தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரங்களும் ஒளிபரப்பப் பட்டன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com