அமரன் திரைப்படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்… படக்குழுவினர் மகிழ்ச்சி!

Amaran film
அமரன் திரைப்படம்
Published on

அமெரிக்காவில் நடக்கும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் திரையிட அமரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் இதுவரை சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், அமரன் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாசார திரைப்பட விருதுக்கான விழாவில் திரையிட அமரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com