100ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!

இஸ்ரோ
இஸ்ரோ
Published on

இஸ்ரோ 100ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டது. என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் தரை,கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com