‘எதிர்பார்த்ததுதான்... பயத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம்’

rnravi mkstalin
ஆளுநர் ரவி - முதலமைச்சர் ஸ்டாலின்
Published on

நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என பயந்து மாற்றுத்திறனாளிகள் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி சொல்லக்கூடிய வகையில் பிரசாரம் நடைபெறவிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது எதிர்பார்த்ததுதான்; அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். ஒருவேளை நாம் நீதிமன்றத்துக்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com