ஜோ பைடனுக்கு இப்படியொரு நோயா…?- வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஜோ பைடன்
ஜோ பைடன்
Published on

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் (வயது 82), 2021 முதல் 2025வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார்.

இந்நிலையில், ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புரோஸ்டேட் புற்றுநோயால் பைடன் பாதிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் வீரியமிக்க இந்த புற்றுநோய் அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சைகள் உள்ளன. இதை சரியாக நிர்வகிக்கமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அவருக்கு வயது அதிகம் என்பது மட்டுமே கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

ஜோ பைடன் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்தேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com