அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு நீதிமன்றம் தற்காலிக தடை!

US President Donald Trump
டொனால்ட் டிரம்ப்
Published on

டிரம்ப் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து சியாட்டில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப், கடந்த 20ஆம் தேதி பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் குறிப்பாக பிறப்புரிமை அடிப்படையில் தானாக அமெரிக்க குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்யப்போவதாக டிரம்ப் அறிவித்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் ஆகிய மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, டிரம்ப்பின் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி டிரம்ப்பின் உத்தரவை அமல்படுத்துவதற்கு 14 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். அமெரிக்க குடியுரிமை சட்டங்களை மறுவரையறை செய்யும் டிரம்பின் முயற்சிக்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com