“மகளிர் உரிமைத்தொகை கடன் தொகை இல்லை; நம்பிக்கை தொகை” – உதயநிதி ஸ்டாலின்

“மகளிர் உரிமைத்தொகை கடன் தொகை இல்லை; நம்பிக்கை தொகை” – உதயநிதி ஸ்டாலின்
Published on

“மகளிர் உரிமைத்தொகையை கடன் தொகையாக பார்க்காமல், நம்பிக்கை தொகையாக பார்க்கிறோம்.” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ள புதிய ஆக்கி மைதான கட்டுமானப் பணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்னர் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

பட்டா என்பது வெறும் ஆவணம் கிடையாது. உங்கள் இடத்தின் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய சட்டப்பூர்வ உரிமையாகும். உங்களுடைய உரிமையை நம்முடைய திராவிட மாடல் அரசு இன்று நிலைநாட்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நிறைய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் கூட இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் அறிவிக்காத, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதற்கான சட்டமசோதாவை, சட்டப்பேரவையில் அவர் அறிவித்தார். இதன் மூலம் 15,000 மாற்றுத்திறனாளிகள் பயனடையவுள்ளனர்.

திராவிட மாடல் அரசு என்றாலே எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் அர்த்தம். சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தேவை அறிந்து செயல்படுவதுதான் திராவிட மாடல் அரசு. மகளிர் உரிமைத்தொகையை கடன் தொகையாக பார்க்காமல், நம்பிக்கை தொகையாக பார்க்கிறோம். இந்த அரசு என்றைக்கும் மக்களுக்கு பக்கபலமாக இருக்கும், நீங்களும் இந்த அரசுக்கு பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com