காமராஜர் பிறந்தநாள்: முதல்வர் சாடல், பிரதமர் புகழாரம்!

காமராஜர்
காமராஜர்
Published on

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123ஆவது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள், காமராசரின் புகழை போற்றி வருகின்றனர்.

பிரதமர் மோடி

காமராஜ் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார்.

அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

சுதந்திர இயக்கத்தின் உயர்ந்த மனிதர்களில் ஒருவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான காமராஜர், சமூக நீதிக்கான அயராத போராளியாக இருந்தார்.

அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட மதிய உணவுத் திட்டம், தடைகளைத் தகர்த்தெறிந்து, பின்தங்கியவர்களுக்கு கல்வியை எட்டக்கூடியதாக மாற்றும் ஒரு சக்திவாய்ந்ததாக இருந்தது.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கம் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று.

அதனால்தான், எத்தனை நன்மை தமிழகத்திற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!.

logo
Andhimazhai
www.andhimazhai.com