எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

‘கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஒட்டுநரா’? - எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பதில்!

“கனகராஜ் ஜெயலலிதாவின் ஓட்டுநராக இருந்ததில்லை. அவரை ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் என இனி ஊடகங்கள் கூறினால் வழக்கு தொடருவேன்” என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. எனது தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கொடநாடு வழக்கு தொடா்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டு என ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான கனகராஜின் சகோதரா் தனபால் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,”யாரோ ஒருவர் ரோட்டில் போகிறவர் எல்லாம் கூறுவதை ஊடகங்கள் வெளியிடுவது தவறு. ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் தனபால். அவர் மூன்று மாதம் சிறையில் இருந்தவர். நில அபகரிப்பு வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். அவர் கூறுவதை எல்லாம் ஊடகங்கள் வெளியிடுவது தவறு.

கனகராஜ் ஜெயலலிதாவின் ஓட்டுநராக ஒருபோதும் இருந்ததில்லை. அவர் சசிகலா அவர்களின் ஓட்டுநராக மட்டுமே பணியாற்றியவர். எனவே இனி ஊடகங்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநர் என கூறினால் நான் வழக்குத் தொடருவேன்” என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com