'கராத்தே பாபு எனும் நான்' – மாஸ் காட்டும் ரவி மோகன் பட டைட்டில்!

ரவி மோகன்
ரவி மோகன்
Published on

ரவி மோகனின் 34ஆவது படத்துக்கு கராத்தே பாபு என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்பொழுது ஜீனி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ரவி மோகனின் 34ஆவது படத்திற்கு தற்காலிகமாக 'ஆர்.எம் 34' எனப்பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார்.

இந்நிலையில், 'ஆர்.எம் 34' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கராத்தே பாபு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள் தமிழக அரசியலை அப்படியே பிரதிபலிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com