செய்திகள்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தந்தையர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பலரும் அவர்களின் அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ராமதாசுக்கு அன்புமணி தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்!
தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்.
ஆக்குதல் அன்னையரின் பணி என்றால்,
அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.
தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!” என பதிவிட்டுள்ளார்.