எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

போதையற்ற தமிழகத்தை உருவாக்குவோம் – எடப்பாடி பழனிசாமி

நம்மையும், நம் குடும்பத்தையும் வளத்துடன் பாதுகாத்து, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சர்வதேச போதை ஒழிப்பு நாளையொட்டி அவர் தனது ட்விட்டரில், நாட்டில் பெருவாரியான குற்றச் சம்பவங்களுக்கும், நம் சமூக சீர்குலைவுக்கும் காரணமான கொடிய போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் அகற்றி, நம்மையும், நம் குடும்பத்தையும் வளத்துடன் பாதுகாத்து, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்.

வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும் போதையின் பாதைக்கு செல்லவிடாமல், நல்வழிப்படுத்துவது நம் கடமையென கொள்வோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com