‘அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது எக்ஸ் தள பதிவை டேக் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் ஊடகத்தில் கூறியிருப்பதாவது:
தேசிய சராசரியை விஞ்சினோம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.