‘இந்தியாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்’

லோகேஷ் கனகராஜ் - அனிருத்
லோகேஷ் கனகராஜ் - அனிருத்
Published on

இந்தியாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்று அனிருத் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத் அளித்துள்ள பேட்டியில், “லோகேஷ் கனகராஜுக்கு பிடித்த கதைக்களம் கேங்ஸ்டர் டிராமா. அவர் அதில் ஊறிவிட்டார். நிஜவாழ்க்கையில் அவர் ஒரு குழந்தை. இவரா இந்தப் படத்தை எடுத்தார் என்பது மாதிரி தெரியும்.

இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவரது கதையில் தலைவர் ரஜினி இருந்தால் எப்படியிருக்கும் என்பதை காணலாம். இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படியொரு நடிகர்கள் கூட்டணி வேறு எந்தவொரு படத்துக்குமே அமையாது. 3 பாடல்கள் மற்றும் அனைத்து நடிகர்களின் பின்புற காட்சிகள் மட்டுமே இதுவரை வந்திருக்கிறது. ’கூலி ’ஒரு புத்திசாலித்தனமான படம். இவ்வளவு நடிகர்களை வைத்து லோகேஷ் கனகராஜின் அற்புதமான திரைக்கதையினை இதில் காணலாம்” என்று தெரிவித்துள்ளார் அனிருத்.

‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com