ரீ ரிலீஸாகும் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ரஜினி முருகன்!

எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி - ரஜினி முருகன்
எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி - ரஜினி முருகன்
Published on

நடிகர் ரவி மோகனின் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய இரண்டு திரைப்படமும் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகின்றன.

திரைப்படங்கள் மறுவெளியீடு சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது. இப்படி மறுவெளியீடு செய்யப்பட்ட படங்களில் விஜய் நடித்த கில்லி கடந்தாண்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.

பழைய படங்களைத் திரையில் மீண்டும் ரசிக்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் தயாரிப்பாளர்களும் முன்பு வெளியான படங்களை மறுவெளியீடு செய்கின்றனர்.

இந்த வரிசையில், 2004ஆம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படம். இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார் படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட்டானது. கணவனை பிரிந்து மகனை வளர்க்கும் தாயின் அன்பு, அவள் படும் கஷ்டங்கள், தாய்க்காக மகன் செய்யும் செயல்கள் என மிகவும் நேர்த்தியாக இப்படத்தின் கதைக்களம் உருவாகியிருக்கும். குறிப்பாக ரவி மோகன் மற்றும் நதியாவின் காம்பினேஷன் மிக அழகாக வொர்க் அவுட் ஆகியிருக்கும்.

இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை மீண்டும் வரும் 14ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர்.

ரஜினிமுருகன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ரஜினிமுருகன் திரைப்படம் மீண்டும் திரைகளில் வெளியிடப்படவுள்ளது.

ரஜினிமுருகன் திரைப்படம் சிவகார்த்திகேயன் நாயகனாக வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்த படமாகும். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பின் வெளியான இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

நடிகை கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின.

இந்த நிலையில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வருகிற மார்ச் 14 அன்று ரஜினிமுருகன் படத்தை மறுவெளியீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com