மதராஸி: தலைப்பில் என்ன பிழை?

முன்னர் வெளியிடப்பட்ட போஸ்டரும், இப்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரும்
முன்னர் வெளியிடப்பட்ட போஸ்டரும், இப்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரும்
Published on

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள எழுத்து பிழையை திருத்தி, படக்குழு வெளியிட்டிருப்பதை பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 23ஆவது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இப்படத்தின் புதிய போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள நிலையில், படத்தின் தலைப்பை வைத்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். காரணம், ஏற்கெனவே வெளியிட்ட படத்தின் தலைப்பு ‘MADHARASI’ என்று இருக்க, தற்போது எஸ்.கே. வெளியிட்டுள்ள தலைப்பு ‘MADHARAASI’ என்று இருக்கிறது. இதை ஒப்பிட்டு பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com