மதுரை எய்ம்ஸ் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவு! – ஜெ.பி. நட்டா

மதுரை எய்எம்ஸ்
மதுரை எய்எம்ஸ்
Published on

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பதில் அளித்துள்ளார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. 2018இல் தொடங்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் தொடங்கமால் இருந்தது.

தமிழக அரசியல் கட்சியினர் தொடர் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கின. கட்டுமான திட்டத்தின் மதிப்பு ரூ.2021 கோடி. இரண்டு கட்டங்களாக கட்டுமானம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கல்வி வளாகம், புறநோயாளிகள் பிரிவு, மாணவர்கள் விடுதி, அலுவலக கட்டடங்கள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது 24 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடமே இல்லாத நிலையில் அட்மிஷன் மட்டும் நடந்தது தொடர்பாக ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியது. நிதி பிரச்சினையால் எய்ம்ஸ் பணிகள் தாமதமானது, தற்போது முழுவீச்சில் பணிகள் நடைபெறுகின்றன. 3ஆண்டுகளில் கட்டுமான பணிகள் நிறைவடையும். மத்திய அரசு நிதி வழங்குவதில் ஒருபோதும் பாகுபாடு காட்டியதில்லை என மாநிலங்களவையில் மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா பதில் அளித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com