மதுரை பெண் போலீசாருக்கு கமிசனர் அளித்த இன்ப அதிர்ச்சி!

மதுரை பெண் போலீசாருக்கு கமிசனர் அளித்த இன்ப அதிர்ச்சி!
Published on

மதுரை மாநகரக் காவல்துறையில் பெண் காவலர்கள் அனைவருக்கும் ஆணையர் லோகநாதன் மகளிர் நாளை முன்னிட்டு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். 

முறையாக அறிவிக்கப்பட்ட விடுமுறை நாள்களிலும் வேலைக்கு வரவேண்டிய சூழலில்தான் பெரும்பாலான காவலர்கள் பணிபுரிகின்றனர். காவல்துறை அமைச்சரான முதலமைச்சர் ஸ்டாலினே சட்டப்பேரவையில் இதைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர்களுக்கு வார விடுமுறை குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். 

இந்த நிலையில், இன்று உலக உழைக்கும் மகளிர் நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, மாநகரக் காவல்துறையில் பணியாற்றும் அனைத்து பெண் காவலர்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார், ஆணையர். 

இதனால் பெண் காவலர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com