செய்திகள்
நாடு முழுவதும் தீபாவளி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இசைஞானி இளையராஜா தன் இசை இரசிகர்களுக்கு ஓர் இனிய தீபாவளிப் பரிசை அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர்தன் சமூகஊடகப் பக்கங்களில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், தன் தாயாரின் நினைவு நாளுக்காக அவரின் நினைவிடத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் நினைவுதினத்தை முடித்துவிட்டு அடுத்த சிம்பொனிகளை இசையமைக்கத் தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிம்பொனி டேன்சஸ் எனும் இசைக்கோவையை உருவாக்கவுள்ளதாகவும் இசைஞானி கூடுதல் மகிழ்ச்சியான தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
இசைஞானியின் இனிய தீபாவளிப் பரிசு இது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியுமா?