இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா (48) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகனும், நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பு காரணமாக நேற்று மாலை திடீரென காலமானார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியடைந்தது. முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைத்துறையினரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போது.?
சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்த மனோஜிக்கு, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார். மறைந்த மனோஜின் உடல் பாரதிராஜாவின் நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மனோஜின் உடல், இன்று மாலை 3 மணி வரை நீலாங்கரை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.