மீடூ புகார்… வீட்டில் கொடுமை படுத்துகிறார்கள்.. நடிகை கண்ணீர் விட்டு கதறல்!

நடிகை தனுஸ்ரீ தத்தா
நடிகை தனுஸ்ரீ தத்தா
Published on

சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழில் விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா, சில வருடங்களுக்கு முன்பு அவர் நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா தான் 2018இல் மீடூ புகார் கூறியதிலிருந்து தன்னை வீட்டுக்கு அருகில் இருப்பவர் கொடுமை படுத்துகிறார்கள் என புகார் கூறி இருக்கிறார்.

கண்ணீருடன் அவர் கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருப்பது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

தனுஸ்ரீ தத்தா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், "2020ஆம் ஆண்டு முதல் எனது வீட்டுக்கு மேலேயும், கதவுக்கு வெளியேயும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதுகுறித்து நான் வசிக்கும் குடியிருப்பு நிர்வாகத்திடம் புகார் அளித்து சோர்ந்து போய்விட்டேன். ஒருகட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு புகார் கொடுப்பதையும் விட்டுவிட்டேன். இப்போது அந்த சத்தங்களுடன்தான் நான் வாழ்கிறேன்.

இன்று நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். கடந்த ஐந்து வருடங்களாகவே தொடர்ச்சியான மன அழுத்தம் இருக்கிறது. தொடர் மன அழுத்தம் காரணமாக Chronic fatigue syndrome எனக்கு வந்திருக்கிறது.

நான் ரொம்பவே நோய்வாய்ப்பட்டும், சோர்வாகவும் இருக்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்' எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதனைப் பார்த்த ரசிகர்களோ அய்யோ பாவம் சீக்கிரம் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு வர வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com