அமைச்சர் க. பொன்முடி
அமைச்சர் க. பொன்முடி

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து பலகட்டங்களாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தனது மனைவியுடன் ஆஜரானார்.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால், வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com