“தப்பித்து ஓடினால் என்கவுண்டர் தானே செய்யணும்”

“தப்பித்து ஓடினால் என்கவுண்டர் தானே செய்யணும்”
Published on

திருப்பூர் என்கவுண்டர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, "குற்றவாளி தப்பித்து ஓடினால் என்கவுண்டர் தானே செய்ய முடியும்" என கூறியுள்ளார்.

மடத்துக்குளம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் இன்று காலை என்கவுண்டர் செய்யப்பட்டார்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “திருப்பூரில் எஸ்எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தப்பியோட முயற்சித்துள்ளார். அதனால் தான் காவல்துறையினர் சுட்டுள்ளனர்.

குற்றவாளிகள் அனைவரும் கூண்டோடு தண்டிக்கப்படுகிறார்கள். போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போது தான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது. இல்லையென்றால் நடக்காது, வேண்டுமென்றே யாரும் என்கவுண்டர் சம்பவங்களை நடத்துவதில்லை.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது வரவேற்கத்தக்கது.

அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரை அதிமுக ஆட்சிக்காலத்திலும் வைத்திருந்தார்கள். பெயர் வைப்பதில் நாங்கள் எங்களுக்காக போராடவில்லை உங்கள அதிமுகவுக்காகவும் போராடி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். குடியரசுத் தலைவர் என்ன முடிவு அறிவிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com