முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பருவ மழை: நேற்று கள ஆய்வு… இன்று அதிகாரிகளுக்கு உத்தரவு! -முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திட்டங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இதுபோன்ற ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். சில இடங்களில் பணிகள் முழுமையாக முடியாத நிலையில் உள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

பணிகளின் முன்னேற்றம் குறித்த புகைப்படங்களை வாரந்தோறும் டேஸ்போர்டில் பதிவேற்றம் செய்திட வேண்டும். திட்டம் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் கலந்தாலோசித்து உடனுக்குடன் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டம் தாமதமானால் அதற்கான மதிப்பீடுகள் அதிகரிக்கும்.

அறிவித்த திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்தால், அதுதான் நிர்வாக ரீதியாக நடத்திக் காட்டும் சாதனை. அந்த சாதனையை நிறைவேற்ற அரசு செயலாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com