செவ்வாய் கிரக மர்மக் குகைகள்!

செவ்வாய் கிரக மர்மக் குகைகள்!
Published on

செவ்வாய் கிரகத்தில் மர்மமான குகைகள் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. அவற்றின் வாயில்களின் படத்தைப் பகிர்ந்துள்ளது நாசா. இந்த குகைகளுக்குள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். செவ்வாயின் மேல்பகுதியில் இருக்கும் கடினமான தட்பவெப்ப நிலைகளில் இருந்து இந்த குகைகள் பாதுகாப்பைத் தரக்கூடும் என்று கருதப்படுகிறது.

இதுபோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட குகை வாயில்கள் அங்கே கண்டறியப்பட்டுள்ளன.

செவ்வாயில் மனிதக்குடியேற்றங்களை உருவாக்க வேண்டும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறிவருகிறார். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் செவ்வாய் மர்மங்கள் உடைக்கப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com