நீட் தேர்வு முடிவு- ஒரு மணி நேரம் அவதி!

நீட் தேர்வு
நீட் தேர்வு
Published on

நீட் தேர்வு முடிவு இன்று மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்பட்டது. பரபரப்போடு ஆர்வத்துடன் முடிவைப் பார்க்க மாணவர்களும் பெற்றோரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் கணிசமானவர்களால் தேர்வு முடிவைப் பார்க்கவே முடியவில்லை. 

தனிப்பட்ட காரணங்களால்தான் அந்த இணையதளத்தைப் பார்வையிட முடியவில்லை எனக் கருதினர். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் இதே நிலைமைதான் நீடித்தது. 

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முடிவுகளைப் பார்வையிட முடியாதபடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கணினித் திரையில் பாப் அப் செய்தி தோன்றிக்கொண்டே இருந்தது. இதனால் நாடு முழுவதும் மாணவர், பெற்றோர் தரப்பில் கடும் அதிருப்தி அடைந்தனர். 

இந்நிலையில், முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் இடம் பிடித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com