நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
நெல்லை ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 60). இவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே இடப்பிரச்சினை நிலவி வந்தது. கடந்த 18 ஆம்தேதி காலை பள்ளிவாசல் தொழுகையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக், அவருடைய சகோதரர் கார்த்திக், முகமது தவுபிக் மனைவி நூர் நிஷா மற்றும் நூர்நிஷா சகோதரர் அக்பர்ஷா உள்ளிட்டோரை தேடி வந்தனர். இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முகமது தவுபிக் மனைவி நூர்நிஷாவை காவலகள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜாகீர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதன்படி அடுத்த 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறை இயக்குநர், நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.