நோபல் பரிசு… டிரம்ப் பெயரை பரிந்துரைக்கும் நெதன்யாகு!

டிரம்பிடம் கடிதம் கொடுக்கும் நெதன்யாகு
டிரம்பிடம் கடிதம் கொடுக்கும் நெதன்யாகு
Published on

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரைப் பரிந்துரைத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். நேற்று, அவர் வெள்ளை மாளிகையில் பேசும்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளார்.

'நோபல் பரிசுக் குழுவிற்கு நான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது. அதிபர் டிரம்ப் அதைப் பெற வேண்டும்' என்று நெதன்யாகு கூறினார். குறிப்பாக மத்திய கிழக்கில், நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் டிரம்பின் தலைமையை இஸ்ரேல் பிரதமர் பாராட்டி உள்ளார்.

ட்ரம்பிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் வைத்தவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர். அவர் கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, இதை குறிப்பிட்டார். இதற்கு பரிசாக, அவருக்கு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் விருந்து கொடுத்தார்.

ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கூறியிருந்தார். இப்போது இஸ்ரேல் பிரதமரும் பரிந்துரைத்திருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com