‘மாட்டோட கோமியத்தை விற்று கூட பொழச்சுக்கலாம்…’ என ஓடேலா 2 படத்தின் டிரெய்லரில் தமன்னா பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வசனத்தை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
பால்நிற மேனி என வர்ணிக்கப்படும் நடிகை தமன்ன தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது ஓடேலா இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், 'ஓடேலா 2' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பெண் சாமியராக வரும் தமன்னா பேசும் வசனங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, 'நிக்கிறதுக்கு தேவை பூமாதா. நாம வாழுறதுக்கு தேவை கோமாதா’. ‘நீங்க வாழ மாட்டை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதோட கோமியத்தை வித்து கூட பொழச்சுக்க முடியும்’ என தமன்னா பேசும் வசனத்தை ட்ரோல் செய்வதோடு, பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும், 'ஓடேலா 2' படத்தின் வாயிலாக சாமியாராக புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தமன்னாவுக்கு பாராட்டுகளும், அவருக்கு இது வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
இந்த படத்தில் தமன்னாவுடன் ஹெபா படேல், நாக மகேஷ், வம்சி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு 'காந்தாரா' புகழ் அஜனேஷ் லோக்நாத் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். ஆன்மீகம் கலந்த திகில் படமாக உருவாகியுள்ள 'ஓடேலா' இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.