புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மக்களவையில் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழமையான வருமான வரிச்சட்டம், 1961-ஐ மாற்றும் அம்சமாக, இந்தாண்டு தொடக்கத்தில் மக்களவையில் வருமான வரி மசோதா 2025 அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த மசோதா மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த வாரம் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மசோதா, 2025ஐ திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாஜக எம்.பி. பைஜய்ந்த் பாண்டா தலைமையிலான 31 பேர் கொண்ட தேர்வுக்குழு, சட்டத்தில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது.

நடைமுறையிலுள்ள வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்துதல், வரி விகிதங்கள் மற்றும் விலக்குகளில் மாற்றம், வரி தவிர்ப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் அவற்றை உள்ளடக்கிய புதிய வருமான வரி சட்ட மசோதா இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதா 2025-ஐ மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் “தேர்வுக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது” என்றார்.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வாக்களர் பட்டியல் சிறப்பு திருத்ததை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால், விவாதம் எதுவும், இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com