புரட்சித் தொண்டன் நாளிதழ் தொடக்க விழா
புரட்சித் தொண்டன் நாளிதழ் தொடக்க விழா

ஓபிஎஸ் தொடங்கிய புது நாளிதழ்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ‘நமது புரட்சித் தொண்டன்’ என்ற நாளிதழை இன்று தொடங்கியுள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட பின்னர் கட்சியின் பெயர், சின்னம், தலைமைக் கழகம் உள்ளிட்ட அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. அதேபோல், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழும் எடப்பாடி பழனிசாமியிடம் சென்றது.

இந்த நிலையில், ’நமது புரட்சித் தொண்டன்’ என்ற நாளிதழை இன்று ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். இந்த நாளிதழின் முதல் பிரதியை சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்டார். இதன் ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com