செய்திகள்
தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது.
சற்றுமுன்னர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் இராஜீவ்குமார் இதைத் தெரிவித்தார்.
வரும் 10ஆம் தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி, 17ஆம் தேதி முடிவடைகிறது.
மறுநாள் 18ஆம் தேதியன்றே மனுக்கள் பரிசீலிக்கப்படும்.
வேட்புமனுக்களைத் திரும்பப்பெறுவதற்குக் கடைசி நாள் ஜனவரி 20ஆம் தேதி என்றும் அவர் கூறினார்.
வாக்குகள் பிப்ரவரி 8ஆம்தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.