தி.மு.க.வில் பதவியிழக்கும் 12 மாவட்டச் செயலாளர்கள்!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
Published on

சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் சில முக்கிய அமைப்பு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.

அதில், மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று முறைக்கு மேல் ஒருவர் இப்பதவியில் தொடரமுடியாது என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதால், பத்துக்கும் மேற்பட்ட மூத்த மா.செ.கள் பதவியிலிருந்து விடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களின் விவரம்:

1. சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் (81),

2. முன்னாள் அமைச்சர் காந்தி (80),

3. முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி (77),

4. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்(77),

5. கம்பம் ராமகிருஷ்ணன் (77)- தேனி தெற்கு,

6. முன்னாள் அமைச்சர் இரகுபதி (76),

7. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு (75),

8. எஸ்.ஆர். சிவலிங்கம் (75)- சேலம் கிழக்கு,

9. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் (74),

10. சாக்கோட்டை அன்பழகன் (72)- தஞ்சை வடக்கு,

11. சுந்தர் (72)- காஞ்சிபுரம் தெற்கு,

12. முன்னாள் அமைச்சர் மஸ்தான் (71)- விழுப்புரம் வடக்கு.

logo
Andhimazhai
www.andhimazhai.com