பள்ளிகளுக்கு 62 இலட்சம் கேக்குகள்- 4 கம்பெனிகளுக்கு ஒப்பந்தம்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக்
Published on: 

குழந்தைகள் தினத்தன்று பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் கேக் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதன்படி, 62 இலட்சம் கேக்குகள் தயாரித்துத்தர நான்கு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார்நிலையில் உள்ள கேக்குகளைத் தயாரித்துத் தர ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் தேதி இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதற்குப்பின், நான்கு முன்னணி நிறுவனங்களுக்கு மொத்தம் 62,46,412 கேக்குகள் வழங்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் :

1. டிரீம் பேக் நிறுவனம் -

எண்ணிக்கை:- 33,87,459 கேக்குகள் (45 கிராம் + 50 கிராம் ஸ்விஸ் ரோல்)

மதிப்பு: ரூ.3.84 கோடி

சுவை : பழம், சாக்கலேட், துண்டுதுண்டான மார்பிள் கேக், ஸ்விஸ் ரோல் டிரிசில்

மாவட்டங்கள்: 20 மாவட்டங்கள் (சேலம், தஞ்சை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை அடங்கலாக)

2. பிரிட்டானியா நிறுவனம்

எண்ணிக்கை: 10,03,996 கேக்குகள் (45 கிராம் வீதம்)

மதிப்பு: ரூ.1.28 கோடி

சுவை: சாக்கலேட், அன்னாசிப்பழம், ஆரஞ்சு, பால், வெண்ணெய்

மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை

3. எலைட் நேச்சுரல் நிறுவனம்:

எண்ணிக்கை: 10,06,861 கேக்குகள்

மதிப்பு: ரூ.1.14 கோடி

சுவை: வனிலா, துண்டுதுண்டு சாக்கலேட்

மாவட்டங்கள்: திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல்

4. ஐடிசி சன்பீஸ்ட் நிறுவனம்

எண்ணிக்கை: 8,48,096 கேக்குகள் (43.2 கிராம்)

மதிப்பு: ரூ.1.07 கோடி

சுவை: டார்க் பேண்டசி ஸ்விஸ்ரோல் சாக்கலேட்

மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர்

கேக்குகளை அடுத்த மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதிக்குள் தயாரித்துமுடிக்க வேண்டும்.

கேக்குகள் அந்த மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும்.

ஒரு பள்ளிக்கு ஒரு வகை கேக் மட்டுமே வழங்கப்படும்.

தரத்தை உறுதிசெய்ய வரும் 26ஆம் தேதி அந்தந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் வாணிபக் கழக அதிகாரிகள் ஆய்வுசெய்வார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com