ஹார்மூஸ் நீரிணை மூடல்: இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?

ஹார்மூஸ் நீரிணை மூடல்: இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?
Published on

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பு வரை, ஹர்மூஸ் நீரிணையை ஈரான் மூடுவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் பலரும் கூறி வந்தனர். அதற்குப் பால காரணங்கள் இருந்தன.

ஒன்று, ஹார்மூஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தை ஈரான் அதிகம் நம்பியுள்ளதாகா கூறப்படுகிறது.

இரண்டாவது, சவுதி அரேபியா போன்ற அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்தி வருவதால், ஈரான் இப்படியொரு முடிவை எடுக்காது என்கின்றனர்.

மூன்றாவது, சர்வதேச அளவில் சுமார் 20 சதவீத எரிபொருள் மட்டுமே ஹார்மூஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

நான்காவது, மேற்கத்திய நாடுகளின் தடைகள் காரணமாக ஈரானிடம் குறைந்த நாடுகளே கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன.

ஐந்தாவது, ஈரானிடமிருந்து சீனா மட்டும் எண்ணெய்யை அதிக தள்ளுபடி விலையில் வாங்குவதால், ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டால் சீனாவே அதிகம் பாதிக்கப்படும் என்கிறார்கள்.

இந்தியா பாதிக்குமா?

கச்சா எண்ணெய் இறக்கு மதியில் 80 சதவீதம் உலக நாடுகளை நம்பியே உள்ளது இந்தியா. இதில் 40 சதவீதம், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஹார்மூஸ் நீரிணை வழியாகவே இந்தியாவுக்கு வருகின்றது. இந்தியா நாள் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியன் கச்சா எண்ணெய் பேரல்களை இந்த ஹார்முஸ் நீரிணையை வழியாக இறக்குமதி செய்கிறது.

தற்போது ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்; இதனால் மிக அதிக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்படும் என்கின்றனர்.

ஆனால், இதை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மறுக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக கச்சா எண்ணெய்க்கான ஆதாரங்களை இந்தியா விரிவுபடுத்தி இருப்பதாகவும், அதில் பெரும்பாலானவை ஹார்மூஸ் நீரிணை வழியாக வருவதில்லை என்கிறார்.

மேலும், எண்ணெய் நிறுவனங்களிடம் போதிய இருப்பு இருப்பதாகவும், தொடர்ந்து வேறு சில வழிகள் மூலம் எண்ணெய் இறக்குமதி தொடரும் என்கிறார்.

பெட்ரோலிய அமைச்சர் சொல்வது மாதிரி நடந்ததால் நல்லதுதான்...!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com