லெக்கின்சுக்குத் தமிழில் என்ன சொல்வது?

- சிறப்புச் செய்தி
லெக்கின்சுக்குத் தமிழில் என்ன சொல்வது?
Published on

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் மாதாந்திர கலைச்சொல் உருவாக்கக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் முனைவர் மா.இராசேந்திரன் தலைமைவகித்தார். பேரா. ஜெயதேவன், மு.இராமசாமி, ஒப்பிலா மதிவாணன், பாரதிபாலன், சா.சரவணன், நா.சந்திரசேகரன், ஆ.மணவழகன், ம.இளங்கோவன் ஆகியோருடன், இராஜ்கண்ணன், கவிஞர் மு.முருகேஷ், முனைவர் அ. ஜேம்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த ’சொல்புதிது’ கூட்டத்தில் புதிய கலைச் சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

நேற்றைய நவம்பர் மாதக் கூட்டத்தில் முப்பது சொற்கள் இறுதி செய்யப்பட்டன. அந்தச் சொற்கள் :

  1. Brownfield project-  தாளடித் திட்டம்

  2. Greenfield project-முதலடித் திட்டம்

  3. Aironox-உடை மிடுக்கி

  4. Aerofoot-காற்று நடைக் காலணி

  5. Invisacook-மறை அடுகலன்

  6. Water walking shoes-நீர்மிசைக் காலணி

  7. Grow bag-பயிர் வளர்ப்புப் பை

  8. Air taxi / Flying taxi-வாடகை வானுந்து

  9. Air car-வானுந்து

  10. Zeptosecond- நுண்ணொடி

  11. Wind farm / Wind park -காற்றாலைப் பண்ணை/ பூங்கா

  12. Cyber fraudster - இணைய மோசடிக்காரர்

  13. Global governance - புவி ஆளுகை

  14. Rapid Stroke Response Team- பக்கவாத மருத்துவ விரைவுக் குழு

  15. Fast Breeder Test Reactor - அணுமின் விரைவாக்க உலை

  16. Intraday trading- நாள் பங்கு வணிகம்

  17. Combo- சேர்க்கை

  18. OTT- இணையப் படத் தளம் (இபத)

  19. White colar terrorism- அறிவுக் கயவர் பயங்கரவாதம்/வன்முறை

  20. Plastic surgeon- மெய்சீர் (அறுவை) மருத்துவர்

  21. Deep-sea mining- ஆழ்கடல் சுரங்கப்பணி

  22. Digital connectivity- இணையத் தொடர்பு

  23. Digital infrastructure- இணையக் கட்டமைப்பு

  24. Assistive Technology- மாற்றுத் திறன் தொழில்நுட்பம்

  25. Down Jacket- இறகுபொதி மேலுடை

  26. Bomber Jacket- கவச மேலுடை

  27. Pufer Jacket-புடைப்பு மேலுடை

  28. Varsity Jacket/Leterman Jacket- அடையாள மேலுடை

  29. Hoodie Jacket- தொப்பி மேலுடை

  30. Legging- காலொட்டு உடை.

    கடைசியாக, லெக்கின்சுக்கு தமிழில் என்ன பெயர் என்பதைத் தெரிந்துகொண்டீர்களா, அன்பர்களே...! அடுத்த மாதம், இதே மாதிரியான புதுப்புது சொற்களின் கோவைக்காகக் காத்திருக்கலாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com