புகழ்பெற்ற கென்யா எழுத்தாளர் கூகி வா தியாங்கோ காலமானார்!

கூகி வா தியாங்கோ
கூகி வா தியாங்கோ
Published on

கென்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் கூகி வா தியாங்கோ நேற்று (மே 28 ) காலமானார். அவருக்கு வயது 87.

ஜனவரி 5, 1938 இல் கென்யாவின் மத்திய பகுதியான லிமுராவில் பிறந்தவர் கூகி வா தியாங்கோ. சிறுவயதிலேயே கொடுமையான வறுமையை எதிர்கொண்ட அவர், உகாண்டாவில் உள்ள புகழ்பெற்ற மேக்கரேர் பல்கலைக்கழகத்திலும், பின்னர் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இங்கிலாந்தில் படித்தபோதுதான் ஜேம்ஸ் என்ற தனது கிறிஸ்துவ பெயரை கூகி வா தியாங்கோ என மாற்றிக் கொண்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் கடுமையாக விமர்சிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். அவர், முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். பிறகு, மொழிக்கு எதிரான காலனித்துவவாதிகளின் எதிர்ப்பின் அடையாளமாக அவரது தாய்மொழியான கிகுயூ மற்றும் ஸ்வாஹிலிக்கு மாறிவிட்டார்.

அரசுக்கு எதிரான தனது கருத்துகளால் 1970இல் கென்ய அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டார். இதனால், தனது நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்காவில் வசித்து வந்தார். சிறைவாசம், தணிக்கை, துன்புறுத்தலை தன் வாழ்நாள் முழுக்க எதிர்கொண்டவர், Weep Not, Child (1964), Devil on the Cross (1980) and Wizard of the Crow (2006) போன்ற முக்கிய படைப்புகளைக் கொடுத்துள்ளார்.

சிலுவையில் தொங்கும் சாத்தான், தேம்பி அழாதே பாப்பா, இரத்தப்பூ இதழ்கள், கறுப்பின மந்திரவாதி ஆகிய நாவல்களும் சில சிறுகதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என பலமுறை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழங்கப்படவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com