நிதி அமைச்சர் வீட்டு பட்ஜெட் திருமணம்!

மணக்காட்சி
மணக்காட்சி
Published on

சின்ன அரசியல் பதவிகளில் இருப்பவர்களின் வீட்டு திருமணங்கள் கூட தடல்புடலாக இருக்கும். திருமண அழைப்பிதழில் தொடங்கி, தாம்பூல பை வரை அது தெரியும். ஆனால், மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் தனது மகள் ப்ரகலா திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ப்ரகலா வாங்மயிக்கு, ப்ரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நிர்மலா சீதாராமனின் கணவரான பரகலா பிரபாகரும் அரசியல் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்தாலும் எந்தவித அரசியல் வாடையும் இல்லாமல் தனது ஒரே மகள் திருமணத்தை கப்சிப் என்று முடித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். தன் வீட்டு திருமணத்திலும் நிதி அமைச்சர் பட்ஜெட் போட்டு திருமணத்தை நடத்தியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com