ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது தொடர்பாக டொனால்டு டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து, அந்நாட்டு மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். " உலகின் நம்பர் 1 பயஙகரவாத ஆதரவு நாடான ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முறியடிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முழுமையான வெற்றி கிடைத்தது. ஈரானின் அணு ஆயுதச் செறிவூட்டும் திறன் முற்றிலும் அழிக்கப்பட்டது' என அவர் கூறினார்.
மேலும் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. வேறு எந்த நாடும் செய்யாதவொன்றை அமெரிக்கா செய்துள்ளது. வீரர்களுக்கு வாழ்த்துகள். இப்போது அமைதிக்கான நேரம்.” என்று பதிவிட்டுள்ளார்.