2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விருது பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அனோரா என்ற திரைப்படம் 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
97ஆவது ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் இன்று கோலகலமாக நடைபெற்றது. கடந்தாண்டு வெளியான சிறந்த படங்களுக்கு 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
விருது வென்ற திரைப்படங்களின் முழுப் பட்டியல்:
சிறந்த நடிகர் - ஏட்ரியன் ப்ரோடி (தி ப்ரூட்டலிஸ்ட்)
சிறந்த நடிகை - மிகே மேடிசன் (அனோரா)
சிறந்த திரைப்படம் - அனோரா
சிறந்த இயக்குநர் - சேன் பேக்கர் (அனோரா)
சிறந்த திரைக்கதை - சேன் பேக்கர் (அனோரா)
சிறந்த படத்தொகுப்பு - சேன் பேக்கர் (அனோரா)
சிறந்த ஒளிப்பதிவு - லோல் க்ராலி (தி ப்ரூட்டலிஸ்ட்)
சிறந்த துணை நடிகர் - கியேரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)
சிறந்த துணை நடிகை - சோய் சல்டானா (எமிலியா பெரெஸ்)
சிறந்த பாடல் - எல் மால் (எமிலியா பெரெஸ்)
சிறந்த பிண்ணனி இசை - டேனியல் ப்ளம்பெர்க் (தி ப்ரூட்டலிஸ்ட்)
சிறந்த ஆவணப்படம் - நோ அதர் லேண்ட்
சிறந்த ஆவணக் குறும்படம் - தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
சிறந்த சர்வதேச திரைப்படம் - ஐயம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
சிறந்த அனிமேசன் திரைப்படம் - ஃப்ளோ
சிறந்த அனிமேசன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆஃப் சைப்ரஸ்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - விக்கட்
சிறந்த ஒலி வடிவமைப்பு - ட்யூன் 2
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ட்யூன் 2
சிறந்த திரைக்கதை (தழுவல்) - பீட்டர் ஷ்ட்ராகன் (கான்கிளேவ்)
சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - ஐயம் நாட் எ ரோபாட்
சிறந்த ஒப்பனை - தி சப்ஸ்டன்ஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பு - பால் டேஸ்வெல் (விக்கட்)
இதில், அதிகபட்சமாக அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது. இயக்குநர் சேன் பேக்கர் 4 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
இதற்கு அடுத்ததாக, தி ப்ரூட்டலிஸ்ட் திரைப்படம் 5 விருதுகளையும் ட்யூன் 2, எமிலியா பெரேஸ், விக்கட் ஆகிய படங்கள் தலா 2 விருதுகளையும் வென்றுள்ளன.