உதயநிதியின் சனாதன சர்ச்சை குறித்து காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். அதற்கு பாஜகவின் ஐடி-விங் பொறுப்பாளர் அமித் மால்வியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், டெல்லியில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எல்லா மதங்களுக்கும் சமமான மதிப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் காங்கிரசின் கொள்கை. கூட்டணியில் உள்ள கட்சிகள் அவரவர் கருத்தைத் தெரிவிக்கவும் உரிமை உண்டு.” என்று கூறினார்.