தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார் ஆகியோருக்கு பத்மபூசண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பறையாட்டக் கலைஞர் வேலு ஆசான், கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரான், புதுச்சேரி தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், கல்வி, இலக்கியம், குடிமைப் பணி, விளையாட்டு முதலிய துறைகளில் சிறந்து விளங்கும் குடிமக்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளாக பத்மவிபூசண், பத்மபூசண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகளை குடியரசுத்தலைவர் மாளிகை இன்று அறிவித்தது.
இதன்படி, ஏழு பேருக்கு பத்மவிபூசண் விருதுகளும், 19 பேருக்கு பத்மபூசண் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இதில் நடிகர் சோபனா சந்திரகுமாருக்கும் கலைப் பிரிவில் பத்மபூசண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டவர்களில்,
கலை பிரிவில் குருவாயூர் தொரை,
இராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி,
பத்திரிகை துறையில் தினமலர் உரிமையாளர்களில் ஒருவரான இலட்சுமிபதி,
இலக்கியத்தில் சீனி விசுவநாதன்,
விளையாட்டில் கிரிக்கெட் அஸ்வின்,
வர்த்தகம் தொழில் துறையில் ஆர்.ஜி. சந்திரமோகன்,
அறிவியல் நுட்பவியலில் எம்.டி.ஸ்ரீனிவாஸ்,
சமையற்கலையில் கே. தாமோதரன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது பெறுவோரின் முழுப் பட்டியலையும் பார்க்க
https://www.padmaawards.gov.in/Document/pdf/notifications/PadmaAwards/2025.pdf