‘பெகல்காம் காஷ்மீரின் இதயம் போன்றது…’- அமரன் பட இயக்குநர் உருக்கம்!

‘பெகல்காம் காஷ்மீரின் இதயம் போன்றது…’- அமரன் பட இயக்குநர் உருக்கம்!
Published on

பெல்காம் காஷ்மீரின் இதயம் போன்றது எனவும் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அமரன் திரைப்பட்டத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் நாகராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அமரன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரின் பெல்காம் தாக்குதலுக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“ஜம்மு - காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தமிழ்நாட்டில் இருந்து அசோக் சக்ரா விருது பெற்ற நான்கு பேரில் ஒருவர்.

பகல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாத தாக்குதல் மனிதத்துக்கும் அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும். ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது. அமரன் படப்பிடிப்பின்போது, பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் எங்களிடம் அன்போடு நடந்து கொண்டனர். தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com